Siragadikka Aasai: அம்மா ரோகினியை கட்டியணைத்த க்ரிஷ்... பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி காவல்நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்த நிலையில், க்ரிஷ் ஆசையாக கட்டிப்பிடித்தது வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடன பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது ரோகினி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் க்ரிஷ் தனது அம்மாவிற்காக கோவிலில் அழுது வேண்டிக் கொண்டிருக்கின்றான்.
உடனே ரவி மற்றும் முத்துவின் அப்பா வந்த க்ரிஷை அழைத்த போது அம்மாவிற்காக வேண்டிக்கொள்வதாக வார்த்தையை விட்டுள்ளார்.
மேலும் ரோகினி வீட்டிற்கு வந்தவுடன் க்ரிஷ் கட்டிப்பிடித்து ரோகினியிடம் பாசத்தை வெளிக்காட்டியுள்ளார். இதனால் வீட்டில் அனைவருக்கும் சந்தேகம் எழுந்ததுடன், வீட்டிற்கு வந்த ரோகினி பழிவாங்குவது போன்று முகத்தை வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |