இந்தியாவை விட எந்தெந்த நாடுகளில் தங்கம் விலை குறைவு? முழுவிபரம் இதோ
இந்தியாவில் தங்கத்தின் விலை தாறுமாறாக உள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று சவரன் ரூ.90 ஆயிரம் விற்கப்படுகின்றது.
இதனால் பாமர மக்கள் தங்கம் வாங்குவதற்கு அதிகமாக தயங்கிவருகின்றனர். இந்தியாவில் பெண்கள் தங்கத்தை ஒரு முதலீடாக நினைப்பதுடன், தனது சொத்தாகவும் நினைப்பதால் அதிகமாக தங்க நகையை சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சில நாடுகளில் தங்கம் குறைவான விலையில் விற்கப்படுகின்றது. அவை எந்தெந்த நாடுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த நாடுகளில் தங்கம் விலை குறைவு?
தங்கம் வாங்குவதற்கு இந்தியாவை விட துபாய் சிறந்த இடமாக பார்க்கப்படுகின்றது. துபாயில் ஜிஎஸ்டி வரி இல்லாதது மட்டுமின்றி, இறக்குமதி வரியும் மிக மிக குறைவாகவே வாங்கப்படுகின்றது.
துபாயைப் போன்று அமெரிக்காவில் தங்கம் விலை மலிவாக கிடைக்கின்றது. இங்கு உற்பத்தி கட்டணங்கள் குறைவாக இருப்பதுடன், சுங்க வரி மற்றும் வேறு வரிகளும் இந்தியாவினை விட குறைவு. அதுமட்டுமின்றி டொலர் வலுப்பெறும்போது, உலக சந்தையின் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும்.

இந்தியாவை விட ஹாங்காங் நாட்டில் தங்கம் விலை குறைவாக இருக்கின்றது. ஏனெனில் வரி இல்லாமலும், VAT இல்லாமல் இருப்பதால் இங்கும் மலிவான விலையில் தங்கம் விற்கப்படுகின்றது.
குவைத் நாட்டில் குறைந்த வரி மற்றும் இறக்குமதி வரிகள் குறைவாக இருப்பதால், தங்கம் விலை குறைவாக இருக்கின்றது. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில், நாணயத்தின் விலைத்தன்மை தங்கம் விலையை பாதிக்கின்றது. இங்கிருந்து பெண்கள் 40 கிராம் தங்கத்தையும், ஆண்கள் 20 கிராம் தங்கத்தையும் கொண்டு வரமுடியுமாம்.

இதே போன்று துருக்கி நாட்டிலும், VAT வரி மற்றும் இறக்குமதி வரி குறைவாக இருப்பதால் தங்கம் விலை மலிவாக கிடைக்கின்றது. தங்கம் வாங்குவதற்கு இந்த நாட்டையும் தெரிவு செய்வது சிறந்ததாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |