இன்று போல் அன்றொரு நாள்... நீ இல்லாமல் என் வாழ்க்கை... இறந்த மகளின் நினைவை பகிர்ந்துக் கொண்ட பாடகி சித்ரா!
சினிமாவில் சின்னக்குயில் சித்ரா என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி இசையில் திளைத்துப் போய் தனது மெல்லிய குரலில் பாடல்களைப் பாடி அனைவரையும் கட்டிப்போட்டவர் தான் சின்னக்குயில் சித்ரா.
இவரின் வாழ்க்கையில் பெரும் சோகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சித்ராவின் மனவருத்தம்
பாடகி சித்ரா திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து தான் நந்தனா என்றக் குழந்தை பிறந்திருந்தது. அந்தக் குழந்தையும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுதான் இருந்திருக்கிறது.
சித்ரா தனது குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர் அதனால் தான் எப்போதும் எங்கு போனாலும் குழந்தையையும் அழைத்துக் கொண்டுதான் போவாராம்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் 2011ஆம் ஆண்டில் துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது தனது மகளையும் அங்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒரு நீச்சல் குளத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.
தான் ஆசை ஆசையாய் பெற்றெடுத்து வளர்த்தக் குழந்தை இப்படியா இறந்துப் போக வேண்டும் என்று துடிதுடித்துப்போயிருக்கிறார்.
குழந்தையின் நினைவு நாள்
இந்நிலையில் இன்று தனது குழந்தையின் 13ஆவது நினைவு நாள் என்பதால் இன்று தனது வலியை சமூக ஊடகத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பதிவில், எங்கள் இதயங்கள் நினைவுகளால் நிறைந்துள்ளன. உங்கள் பெயரை பெருமையுடன் பேசுகிறோம். நீ இல்லாமல் வாழ்க்கை சென்றாலும் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. எங்கள் அன்பான நந்தனா மோலின் அன்பான நினைவாக.... என்று உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் சித்ராவுக்கு ஆறுதலாக கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.