நீச்சல் குளத்தில் குரங்குகள் செய்த அட்டகாசம்... லாக்டவுனை என்னம்மா என்ஜாய் பண்றாங்க?
குரங்குகள் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் பதிவிட்டுள்ள டிவிட்ட ர் பதிவு ஒன்றில், குரங்குகள் சில மனிதர்களை போல் நீச்சத்தில் குளத்தில் குதித்து குதித்து விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொதுவாக லாக்டவுன் என்பது அறிவித்துவிட்டால், மனிதர்களிடமிருந்து இயற்கை மட்டுமின்றி சில விலங்குகளும் மகிழ்ச்சியாகவே இருக்கும் என்பதற்கு இக்காட்சி உதாரணமாகியுள்ளது.
21 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில், குரங்குகள் சில நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் உயரமான குடை போன்ற அமைப்பின் மீது ஏறி அங்கிருந்து நீச்சல் குளத்தில் குதிப்பதும், பின்னர் குளத்தில் இருந்து வெளியேவந்து மீண்டும் அந்த குடை மீது ஏறி குளத்தில் குதிப்பதுமாக உள்ளது.
மனிதர்களை போல் நீச்சல் குளத்தில் குதூகலமாக குளிக்கும் இந்த குரங்குகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
With humans under lockdown... pic.twitter.com/VnapND05u7
— Susanta Nanda IFS (@susantananda3) May 5, 2021