தந்தையர் தினத்தில் தனது தந்தையின் நினைவு நாள்: ஆரவ்வின் கண்ணீர் பதிவு
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் இன்று தந்தையர் தினத்தில் மறைந்த தனது தந்தை குறித்து உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகைகளை கவர்ந்த ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். பின்பு தற்போது பட வாய்ப்பு என படுபிஸியாக இருந்து வருகின்றார்.
நடிகர் ஆரவ் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆரவ் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவரது தந்தை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் தேதி உடல்நலக் குறைவினால் காலமானார்.
இதுகுறித்து பதிவிட்ட ஆரவ், கடந்த இரண்டு மாதமாக அவர் பட்ட கஷ்டங்களை நாங்கள் பார்த்து தவித்தோம். எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை உண்டாகிவிட்டீர்கள் அப்பா.
இந்த இழப்பில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்பது தெரியவில்லை. எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதியுங்கள் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தில் தனது தந்தை இறந்து சரியாக 6 மாதம் ஆகிவிட்டது என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். மேலும், சிறு வயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.