Singappenne: ஆனந்திக்கு வந்த ஆபத்து- மருத்துவமனையில் அன்பு அம்மா.. மகேஷ்வுடன் உறவு முடிந்துவிடுமா?
ஆனந்திக்கு வந்த ஆபத்தால் அன்பு அம்மா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்க பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதாநாயகிக்காக உண்மையான காதலூடன் காத்திருக்கும் இரண்டு நாயகர்களை கொண்டு நகர்த்தப்படுகின்றது.
ஆனந்தியை பணக்காரரான மகேஷும், ஏழை வீட்டு பையனான அன்புவும் காதலிக்கிறார்கள். எதுவும் அறியாத பாவப்பட்ட பெண்ணாக இருக்கும் ஆனந்தி இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதனையே கருவாக வைத்து இந்த கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியை கடத்துவதற்காக இரண்டு பேர் பாதையில் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியில் வரும் அன்புவின் அம்மாவை கண்டதும் என்ன ஆனாலும் அவரிடம் சென்று பேசுவோம் என்ற தைரியத்துடன் அவர் நேரில் செல்கிறார்.
ஆனந்தியால் பாதிக்கப்பட்ட அன்பு அம்மா
இந்த நிலையில், ஆனந்திக்கு வந்த ஆபத்தால் அன்புவின் அம்மா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆனந்தி அவரை மருத்துவமனையில் அனுமதி விட்டு, அந்த தகவலை கோல் செய்து அன்புவுக்கு கூறுகிறார். அதன் பின்னர் அவர் தங்கையுடன் வந்து பார்க்கிறார்.
ஆனந்தியும், அன்புவும் இன்றைய தினம் வேலைக்கு வரமாட்டார்கள் என மகேஷ் கடுப்பான முகத்துடன் அங்குள்ள மேலாளரிடம் கூறுகிறார். அன்பு வருகையை கண்டு ஒருவர், இவர் ஏன் இங்கு வருகிறார், ஒரு வேளை மருத்துவமனையில் இருப்பவர் அவருக்கு தெரிந்தவரா? என சந்தேகித்தப்படி அமர்ந்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |