Singappenne: அன்புவை கடத்திய கும்பல் - மித்ராவின் புதிய திட்டமா இது?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு கடத்தபட்டுள்ள நிலையில் ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்டு நிற்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே. தற்போது கதைக்களம் எதை நோக்கி செல்கிறது என்பதையே கணிக்க முடியவில்லை.
மகேஷ் ஆனந்தி கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என அவரை அடித்து மிரட்டி சண்டைபோட்ட சம்பவங்கள் கடந்த எபிசோட்டில் காட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது அன்பு கடத்தபட்டுள்ளார்.
கடத்தபட்ட அன்பு
ஆனந்தி அன்பு வீட்டிற்கு வந்து நான் மகேஷ் சாருக்கு எல்லாம் புரிய வைக்கிறன், அன்பு இதற்கு காரணம் இல்லை என்பதை அவருக்கு சொல்கிறேன் என அழைத்து செல்கிறார்.
செல்லும் வழியில் அன்புவிடம் ஒரு சில வார்த்தைகள் ஆனந்தி பேசுகிறார். அடுத்ததாக மகேஷிடம் அன்புவை கடத்தி விட்டார்கள் என பதட்டத்துடன் கூறுகிறார்.
அரவிந்தின் சூழ்ச்சியால் நடந்த இத்திட்டத்தை மகேஷ் எப்படி முறியடிக்க பார்க்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
