சரிகமப - வில்: மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்... தந்தைக்காக அழுத நடுவர் சரண்
இந்த வாரம் சரிகம நிகழ்ச்சியில் போட்டியாளர் ஹரிஸ் SPB பாடலை அசல் பாடல் போல பாடியதால் நடுவர் சரண் அழுத காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம் மண்வாசனை சுற்று சிறப்ப்பாக நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர் அருண் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் காத்திருந்த SPB சுற்று இந்த வாரம் நடைபெற இருக்கின்றது. இதில் போட்டியாளர்கள் SPB யின் சிறப்பான பாடல்களை பாடி கோல்டன் பெர்போமன்களை தட்டிச்செல்ல உள்ளனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகிய ப்ரொமொவின்படி போட்டியாளர் ஹரிஸ் “மின்னலே நீ வந்ததேனடி” என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஈர்ப்பு கொண்ட பாடல்.
ஒரு சில பாடல்களை பாடகர்கள் பாடும்போது அது அவர்களுக்கே எழுதபட்ட பாடல் போல இருக்கும். அப்படி ஒரு பாடலில் SPB இந்த மின்னலெ பாடலும் ஒன்று.
ஆனால் இந்த பாடலை SPB யின் அதே அசல் போல போட்டியாளர் ஹரிஸ் பாடி இருந்தார். இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்து.
இது கேட்பதற்கு அப்படியே SPB யின் குரல் போல இருந்ததால் நடுவர் சரண் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் தற்போது ரசிகர்களை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
