டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம்
பொதுவாக நம்மிள் பலர் டீ பிரியர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் காலை எழுந்ததும் டீ இல்லாமல் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்கமாட்டார்கள்.
மாறாக வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். வயிற்றில் உள்ள செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். டீ அல்லது காபியில் உள்ள காஃபின், டானின் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
டீ குடிப்பவர்களுக்கு அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் அதனை எப்படி கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்படியாயின், வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்கள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் டீயா?
பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின்னர் முதலில் ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்த்துக் கொள்வதால் செரிமான கோளாறுகளை தடுக்கலாம்.
தினமும் காலையில் டீ அருந்துவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பது பல நோய்களுக்கு தீர்வாக அமையும் என நிபுணர் ஒருவர் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு தண்ணீர் குடிப்பது கஷ்டமாக இருந்தால் அவர்கள் இளநீர் குடிக்கலாம். இது வயிற்றில் இருக்கும் அமிலத்தை வெளியேற்றும்.
ஆபத்து நிச்சயம்
விரும்பி குடிக்கும் டீ பிரியர்களுக்கு டீயில் இருக்கும் காஃபினின் விளைவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, வயிற்று எரிச்சல் ஏற்படுதல், தலைசுற்றல், குமட்டல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும்.
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை நீங்கி விடும் என சொல்ல முடியாதுஇ மாறாக டீயால் வரும் அமிலத்தன்மை இல்லாமல் போகும் என இரைப்பை குடல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டீ குடிப்பதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் அது வயிற்றில் உள்ள அமில கார சமநிலை சீராக வைத்துக் கொள்ளும். லேசான சிற்றுண்டி அல்லது சில பழங்கள் கூட டீக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
டீ-க்கு பதிலாக இதை குடிக்கலாம்
பால் சேர்த்த டீ குடிக்கும் ஒருவர், அதற்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவற்றை குடிக்கலாம். அதே போன்று பாலில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் அமில பிரச்சனையை அதிகப்படுத்தும்.
பால் டீ அவசியம் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் தேயிலையை பாலுடன் போட்டு கொதிக்க வைக்காமல் தனியே கொதிக்க வைத்து குடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
உதாரணமாக பிளாக் டீ தயார் செய்து, அதனுடன் பால் சேர்த்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்து விட்டு பகலில் எண்ணெய் உணவுகள், காரம் அல்லது ஜங்க் புட்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்றுவது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
