Ethirneechal:நந்தினியால் மாட்டிக்கொண்ட ஜனனி - குணசேகரனுக்கு ஆப்பு வைக்கப்போகும் தர்ஷன்
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியால் ஜனனி மாட்டிக்கொண்ட காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்ஷன் திருமணத்திற்கு குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி முன்வரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சந்தோஷத்திற்காக மற்றவர்களை காவு வாங்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள்.
அதிலும் குணசேகரன் தன் மனைவியையும் மகனையும் காவு வாங்கி தன் சுயநலத்திற்காக இந்த திருமணத்தை நடத்தி வைக்க முயற்ச்சிக்கிறார்.
இதை தடுத்து தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடத்தி வைக்க ஜனனி மற்றும் ஜீவானந்தம் உயிரை கொடுத்து போராடுகின்றனர்.
நந்தினியால் மாட்டிக்கொண்ட ஜனனி
ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கண்டுபிடித்து காப்பாற்ற ஜனனி தனியாக சென்றிருக்கிறார். இந்த நிலையில் இவரை தேடி குணசேகரனின் ஆட்கள் துரத்துகின்றனர்.
அப்போது ஜனனி ஒளிந்துகொண்டிருந்த ஒரு கடையில் ஜனனியை பற்றி குணசேகரனின் ஆட்கள் விசாரித்துக்கொண்டிருந்த சமையத்தில் நந்தினி ஜனனிக்கு கால் எடுக்கிறார்.
இதை குணசேகரனினன் ஆட்கள் எடுக்கவும் அதை எப்படியோ அவர்களிடம் இருந்து கடைக்காரர் எடுத்துவிட்டார். மறுபக்கம் நந்தினி தர்ஷனை ஜனனியுடன் பேச வைக்க பலவாறு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.
இந்த சமயத்தில் கதிருக்கு சந்தேகம் வந்து தர்ஷனை பார்க்க வருகிறார். ஒருவேளை பார்கவி இருக்கும் இடத்திற்கு மருமகள்கள் எல்லோரும் சேர்ந்து தர்ஷனை அழைத்து செல்ல போகிறார்களோ பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
