இளநரைக்கு முடிவு கட்டும் வெற்றிலை எண்ணெய் - எப்படி செய்யலாம்?
தற்போது இளம் வயதிலே இளநரை ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல இரசாயன பொருட்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தலைமுடியை முற்றிலும் வெள்ளையாக மாற்றும்.
எப்போதும் நம்மை சுற்றியுள்ள தீர்வை நாம் நாட மாட்டோம் அதற்கு மாறாக இரசாயனங்களை பயன்படுத்த பழக்கப்படுத்தி கொண்டோம்.
அந்த வகையில் இளநரைக்கு வெற்றிலை எண்ணெய் மிகச்சிறந்த ஒரு தீர்வு. இதை செய்வதற்கு சரியான படிமுறை தெரிந்தால் போதும். அதை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
வெற்றிலை பயன்
வெற்றிலையில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பொட்டாசியம், தியாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இது இளநரைக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். முதலில் ஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 வெற்றிலைகளைப் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அது நன்றாக கொதித்து வரும் சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு அதை வடிகட்டி ஆறவிடவும். இந்த தண்ணீரை உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் நுனி வேர் தேய்த்து தலைக்கு அலசி வரலாம்.
இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தலைமுடியின் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்கிறது.
வெற்றிலை எண்ணெய்
வெற்றிலை எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் 15 வெற்றிலைகளை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இலை கொஞ்சம் கருப்பாக மாறியதும் இந்த எண்ணெய்யை வடிகட்டி அதனடன் செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த எண்ணையை ஒரு நாள் முழுக்க அப்படியே ஊற விட்டு எப்போதும் குளிக்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தேய்த்து குளித்தால் நரைமுடி காணாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
