Singappenne: தாலியை கழற்றிய ஆனந்தி - ஒற்றை வார்த்தையால் மனமுடைந்த அன்பு
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு அம்மா பேசிய கொச்ச வார்த்தைகளுக்கு ஆனந்தி ஆத்திரமடைந்து தாலியை கழற்றி வீசுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது ஆனந்திக்கு தெரியாமலே அவருக்கு அன்பு தாலி கட்டியுள்ளார்.
ஆனந்தி ஜெயந்தியின் திருமணத்தில் தோழியாக அமர்ந்திருந்த நிலையில், ஆனந்தியின் கழுத்தில் அன்பு தாலி கட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி மேடையில் கத்தி எல்லோரையும் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அன்புவின் அம்மா ஆனந்தியையும் அவரின் குடும்பத்தையும் மிகவும் கேவலமாக பேசி ஆனந்தியை தாலியை கழற்றி விச சொல்லி இருப்பார்.
தற்போது ப்ரொமொவில் ஆனந்தி தாலியை கழற்ற முற்படும் போது ஆனந்தியின் அப்பா வேண்டாம் என நிறுத்தி விட்டார். ஆனந்தி அன்புவை ஏற்றுக்கொள்ளாமல் தாலியை சுமையாக நினைத்துக்கொண்டு அங்கே இருந்து சென்று விடுகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |