சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருக்கு டும் டும்.. பொண்ணு யார் தெரியுமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் கதாநாயகராக நடித்து வரும் அமல்ஜித்திற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிங்கப்பெண்ணே சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.
இந்த சீரியல், அமல்ஜித் - மனிஷா மகேஷ்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் காதல் கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிகர்களால் ஒவ்வொரு எபிசோட்டும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சிலர் அன்பு- ஆனந்தி சேர்ந்து விட வேண்டும் என பிராத்தணை செய்து வருகிறார்கள்.
அன்பு- ஆனந்தி இருவருக்கும் சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி, அன்பு மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். அவர்களின் கணவன்- மனைவி உறவில் வரும் பிரச்சினைகள் கருப்பொருளாக வைத்து காட்டப்பட்டு வருகிறது.
பொண்ணு யார் தெரியுமா?
இந்த நிலையில், அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் அமல்ஜித்துக்கு விரைவில் திருமணம் செய்தி வெளியாகி வந்தது.
அந்த வகையில், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமல்ஜித்துக்கு மனைவியாக வரப்போகும் மணப்பெண், அமல்ஜித்துடன் அம்மன் என்ற தொடரில் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் பொழுது தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்த அமல்ஜித் - பவித்ரா விரைவில் ரியல் ஜோடியாக மாற இருப்பதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |