என்ன ஆச்சு நடிகர் சல்மான் கானுக்கு? ஸ்டைலாக இருந்தவர் வயதானவராக மாறியுள்ளதால் அதிர்ச்சி
பாலிவுட் நடிகரான சல்மான் கான் தற்போதைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சல்மான் கான், தனது உடம்பை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.
இந்நிலையில் தற்போது சல்மானின் காணொளி ஒன்று வெளியாகி, இது சல்மான் கான் தானா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட சல்மான, மிகவும் வயதான தோற்றத்துடன், சோர்வாகவும் வந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தற்போது இவருக்கு 60 வயதாகும் நிலையில், ஜிம் சென்று தனது உடலை இளமையாகவே வைத்திருந்தார். இந்நிலையில் சல்மானின் இந்த தோற்றத்தினை பார்த்த ரசிகர்கள் புதிய படத்திற்கு மேக் ஓவராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் மற்றும் சிலர் வயதானதால் தற்போது முகத்தில் தெரிய ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் சல்மான் கானின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் வழக்கம் போன்று நகைச்சுவையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்.. அந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்... நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி அங்கிருந்தவர்களையும் சிரிக்க வைத்துள்ளார்.
What happened to Salman Khan?? At first I thought it's not him but saw shera too there
— Gagan Choudhary (@trigguuuu) July 19, 2026
He is ageing like Dharmendra. pic.twitter.com/u52EZHx4KX
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |