விஜய் டிவி பிக்பாஸ் நடத்தலையா? உண்மையில் நிகழ்ச்சியை இயக்குவது இவங்க தானாம்..
தற்போது பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான உரிமையாளர் விஜய் டிவி அல்ல என்றும் இது தொடர்பான வேறு சில உண்மைகளும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஷோ
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பாதாவது சீசன் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சுமாராக ஏழு சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த இரண்டு சீசன்களை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன பிரச்சினை உள்ளே நடந்தாலும், அதற்கான முழு காரணம் விஜய் டிவி தான் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரவலாக உள்ளது. ஆனால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறும் ஒளிபரப்பும் வேலையை தான் செய்கிறது, அதற்கு பின்னால் பெரிய குழுவொன்று இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், எண்டெமால் ஷைன் எனப்படும், (Endemol Shine) நிறுவனம் சர்வதேச அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறது.
விஜய் டிவி- பிக்பாஸ் என்ன தொடர்பு?
இந்த நிலையில், இந்த நிறுவனம் பிக்பாஸ் மட்டுமல்லாமல் இது போன்று உள்ள ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் தயாரித்து வருகிறது.

மேலும், Zee News, Hindutamil.in மற்றும் ஷைன் குழு (Shine Group)உள்ளிட்ட துணை நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகிறது. இவ்வளவு பிரபலமாக இருக்கும் இந்த நிறுவனத்திற்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும், Budget schedule, ப்ரோமா, விதிமுறைகள், டாஸ்க், தினசரி நிகழ்வுகள், TRP போன்ற நிகழ்ச்சியின் முழு நிகழ்ச்சி வடிவமைப்பை இவர்களே செய்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருப்பவர்கள் அதிகமாக பங்கேற்றுக் கொள்வதால் இது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என விமர்சனங்கள் அதிகமாக எழுகின்றன.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன நடக்க வேண்டும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது என பலரும் கூறி வந்த நிலையில், ஆனால் இதுவொரு ரியாலிட்டி ஷோ என்பதால் எந்தவித திட்டமிடலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |