தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது... அடுத்த நொடியில் CM விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!
சினிமா மற்றும் தனியிசை ராப் பாடகரான ‘தெருக்குரல்’ அறிவு, சென்னை தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா பார்டி சார்பில் நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின்போது பேரணி நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர். இதில் பல மாணவர்கள் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது
இந்தச் சூழலில், சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் நான்கு பேர் இருந்ததாகவும், அனைவரும் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அறிவுவை மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து, முதல்வர் விஜய்யை சந்திக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களில் ஒருவரான ‘தெருக்குரல்’ அறிவு, "வாத்தி ரெய்டு", "தளபதி கச்சேரி" உள்ளிட்ட பிரபல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக்கழகத்தின் சித்தாந்தப் பாடலையும் அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |