காதலை வெளிப்படுத்த நாடகமாடிய காதலன்: பதறிப்போன காதலி! வைரலாகும் வீடியோ காட்சி
மைதானத்தில் வைத்து வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய காதலனின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
காதல்
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இனம், மதம், மொழி அறியாது வருவதே காதல். அன்று முதல் இன்று வரை காதல் என்பது வரலாற்றுப் படைப்பாகவே உள்ளது.
காதல் அழிவதில்லை என்பதற்காக எத்தனை சின்னங்களை உருவாக்கி மறைந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. சிலர் இதில் பித்துப் பிடித்துப்போய் உள்ளதையும் அறிந்திருக்கின்றோம்.
இக்காதலை வெளிப்படுத்துபவர்கள் புதிது புதிதாக சிந்தித்து காதலியை ஈர்க்கும் வகையில் பரிசில்களை வழங்குவார்கள்.
அந்தவகையில் தனது காதலை இளைஞன் ஒருவர் காதலை வெளிப்படுத்தியது அவரின் காதலியையே பதற்றமடைய வைத்துவிட்டது.
நாடகமாடிய காதலன்
கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விளையாட தயாராகவிருக்கும் போட்டியாளர்கள் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் பாய்ந்து செல்லும் போது திடீரென கீழே விழுந்து காலில் அடிபட்டது போல துடித்துள்ளார்.
இவரைக் கவனித்த சிலர் அவர் அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாமல் இருந்திருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து குறித்த இளைஞருடன் வந்த பெண் வந்ததும் அப்பெண் முன் திடீரென எழுந்து முழங்காலிட்டு தனது சட்டைக்குள் வைத்திருந்த மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார்.
இதைக்கவனித்த அனைவரும் இவர் காலில் அடிப்பட்டது போல நாடகமாடியுள்ளார் என்பதை அறிந்துக் கொண்டனர். தனது காதலை வெளிப்படுத்துவதற்காகத் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பதை அறிந்து அனைவரும் அவரை உற்சாகப்படுத்தினர்.
இளைஞனின் காதலை அப்பெண் ஏற்றுக் கொண்டதும் அவர் துள்ளிக்குதித்து ஆராவாரம் செய்துள்ளார்.
அவர் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய காட்சி இணையத்தளத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.
He faked the injury to propose to his girlfriend 😂🙌
— ESPN FC (@ESPNFC) January 2, 2023
(via Klaudhajdari/TT) pic.twitter.com/h1xyNcmIKN