குழந்தை நட்சத்திரமாக அசத்திய நடிகர்.... இவருக்கு இவ்வளவு அழகான மனைவி, குழந்தையா?
குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர் உதயராஜின் குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த ஆயுதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் உதயராஜ்.
பின்பு திருடா திருடி, விஜய் நடித்த திருமலை, பானா காத்தாடி படத்தில் நடித்த இவர்கள் கடந்த 2019ல் நடிகர் கார்த்தியுடன் கைதி படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்துள்ளார். பலரும் இவரை சின்னப்பையன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் திரௌபதி படத்தில் நடிகையின் தங்கையாக நடித்த ஜனனியை இவர் திருமணம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இவருக்கு குழந்தையும் இருப்பது புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.