தப்பி தவறிக் கூட இந்த பழத்தை அதிகம் சாப்பிடாதீங்க! ஆபத்து நிச்சயம்
பொதுவாக பழங்களில் அதிக சுவை கொண்ட பழங்களில் ஒன்று தான் இந்த அன்னாசிப்பழம்.
இந்த பழத்தில் புளிப்பு, இனிப்பு என இரண்டு சுவையும் கலந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்.
இதனை கோடைக்காலத்தில் அதிகமாக சாப்பிடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கோடைக்கால சூட்டை தனிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீஸ், கால்சியம், மற்றும் செரிமான நொதிகள் என உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
அந்த வகையில் அன்னாசிப்பழத்தை எந்த நோய்களுக்கு சாப்பிடுவார்கள் என்பதனை நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அன்னாசிப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. அன்னாசிப்பழத்தில் அதிகமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
2. இந்த பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் என்ற பதார்த்தம் 40 வயதிற்கு மேல் ஏற்படும் மூட்டு தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது.
3. நோயெதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடலாம். ஏனெனின் வைட்டமின் சி சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட் இதில் அதிகமாக இருக்கின்றது.
4. அன்னாசிபழத்தில் இருக்கும் மற்றும் மக்னீசியம் காரணமாக எலும்புகளின் வலிமை அதிகரிக்கிறது.
5. மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் தாராளமாக அன்னாசிபழத்தை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் சிக்கல்களின்றி தினமும் மலம் வெளியேறும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
1. அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிடக் கூடாது. இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் குமட்டல் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தி விடும்.
2. நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சற்று குறைவாக தான் எடுத்து கொள்ள வேண்டும்.
3. பொதுவாக நாம் சாப்பிடும் வைட்டமின் சி நிறைந்த இந்த பழங்களை பழங்களாக மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும்.
4. அன்னாசிப்பழத்தை பழுக்காமல் சாப்பிடுவதால் டுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
5. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய சத்துக்கள் அன்னாசிப்பழத்தில் அதிகமாக இருக்கின்றது. இது இரத்த சக்கரையின் அளவை அதிகப்படுத்தும்.
6. பற்களில் மற்றும் ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை தப்பி தவறிக் கூட சாப்பிடாதீங்க. ஏனெனின் அன்னாசிப்பழத்தின் அமிலத்தன்மை இருக்கின்றது இது பற்குழி மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம்.
7. முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட கூடாது.
8. கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம். இதனால் கருகலைப்பு ஏற்படும்.
9. அன்னாசிப்பழம் சாப்பிடும் போது அதிகமான நச்சுத்தன்மை உடலில் உருவாதற்கு காரணமாக இருக்கின்றது. இதனால் அன்னாசிப்பழம் குழந்தைகளுக்கு கொடுப்பது சற்று ஆபத்தானது.
10. செரிமான பிரச்சினையிருப்பவர்கள் அன்னாசிபழத்தை அதிகமாக எடுத்து கொள்வதனை தடுக்க வேண்டும்.