கோழி இறைச்சியில் கழுத்து மற்றும் இதையம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
கோழி இறைச்சியில் அனைத்து பாகங்களும் சாப்பிடக்கூடிய என்றாலும் சில பகுதிகள் சாப்பிட்டால் அது உடலில் கோளாறுகளை கொண்டு வரும்.
சிக்கன் பாகங்கள்
எல்லோருக்கும் பிடித்த மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் இறைச்சி என்றால் அது சிக்கன் தான். கோழி இறைச்சியில் கால் தொடக்கம் தலை வரை எல்லா பாகங்களையும் சமைப்பார்கள்.
ஆனால் இதில் பலரும் அறியாத ஒன்று நாம் சிக்கனில் எல்லா பகுதிகளையும் சாப்பிட கூடாது. ஆரோக்கிய நிபுணர்கள் பலரும், அதுகுறித்து தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.
ஆனாமல் மக்கள் என்ன செய்கிறார்கள் எது நன்றாக இருந்தாலும் அதன் பாதிப்பை அறியாமல் அப்படியே சாப்பிடுவது செய்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் சிக்கனின் கழுத்து, இதயம், தோல் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பாகங்கள்
| தோல் | இது க்ரிஸ்பியாக சமைக்கப்படும்போது சிலருக்கு பிடிக்கும். ஆனால் சிக்கனின் தோல்பகுதியென்பது கொலஸ்ட்ரால் அளவை சட்டென அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டது. இதயப் பிரச்னைகளின் அபாயத்தையும் இது அதிகரிக்கும். மட்டுமன்றி தோல்பகுதி எவ்வளவு சமைக்கப்பட்டாலும், அதன் பாக்டீரியா அப்படியே இருக்கும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, முடிந்தவரை இதை தவிர்த்துவிடவும். |
| கழுத்துப்பகுதி | பெரும்பாலும் சூப்பில் இப்பகுதியை சேர்த்து சாப்பிடுவர். ஆனால் இவற்றில் பாக்டீரியா அதிகம் இருக்குமென்பதால் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நன்கு சுத்தப்படுத்திவிட்டு சமைக்கும்போது இந்த பாக்டீரியாக்கள் அகற்றப்படும் என்றாலும்கூட, கழுத்துப்பகுதியை அவ்வளவு சுத்தமாக கழுவ நேரமெடுக்கும் என்பதால் முடிந்தவரை தவிர்க்கவும். |
| தலைப்பகுதி | பாரம்பரிய முறையில் சூப் தயாரிப்பவர்கள் சிலர், அதில் கோழியின் தலையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கோழிகள் உட்கொள்ளும் தீவனம் அல்லது சுற்றுப்புறச் சூழல் காரணமாக, அவற்றின் தலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது நச்சுக்களின் படிவுகள் (Pesticide residue) சேர வாய்ப்புள்ளது என்பதால் நன்கு சுத்தம் செய்வதும், சரியாக வேகவைப்பதும் அவசியம். முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது சிறந்தது. |
| கால் விரல்கள் | இவை தரையிலேயே அதிக நேரம் இருப்பதால் தூசி, மாசு, பாக்டீரியா என எல்லாமே அதிகம் இருக்கும் அபாயம் உள்ளது. ஆகவே இதனை முடிந்தவரை தவிர்த்துவிடவும். |
| குடல் | இவை முழுக்க முழுக்க பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளால் நிறைந்திருக்கும். எவ்வளவு சுத்தம் செய்தாலும் அவற்றை அகற்றுவது கடினம்தான் என்பதால் முற்றிலுமாக முழுமையாக இதை தவிர்த்துவிடவும். |
| நுரையீரல் | மிக அரிதாக, சில பாரம்பரிய சிக்கன் உணவுகளில் இவை சேர்க்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் ஒட்டுண்ணிகள், நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கும். என்னதான் வேகவைத்தாலும் அவை முழுமையாக அழிவதில்லை என்பதால் மொத்தமாக தவிர்ப்பதே சிறந்தது |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |