நீங்க வெர்ஜினா? நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த கமலின் மகள்
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனைப் பார்த்து நபர் ஒருவர் கேட்ட வில்லங்கமான கேள்வி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். இவர் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழில் படவாய்ப்புகள் குறைய தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தெலுங்கில் தற்போது சலார் திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்தப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்நிலையில் தற்போது சாந்தனு என்கிற டூடில் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருவதோடு, ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தும் வருகின்றனர்.
நீங்கள் வெர்ஜின்னா?
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் அண்மையில் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதனை எல்லாம் பார்த்து விட்டு ரசிகர் ஒருவர் ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாத மிகவும் வில்லங்கமான கேள்வியைக் கேட்டிருக்கிறார் அதற்கு ஒரு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.
நபர் ஒருவர் நீங்கள் வெர்ஜின் பெண்ணா?எனக் கேட்டதற்கு ஸ்ருதிஹாசன் ஒரு பதில் கொடுத்திருக்கிறார்.
அதில் அந்த நபர் வெர்ஜின் என்பதை ஆங்கிலத்தில் தவறாக எழுதி இருந்ததை பார்த்த ஸ்ருதிஹாசன், முதலில் வெர்ஜின் என்பதன் ஸ்பெல்லிங்கை சரியாக தெரிந்துகொள்ளும்படி அந்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்தார்.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது.