காதலனுடன் ஸ்ருதிஹாசன் செய்த முகம்சுழிக்கும் காரியம்: பொது இடத்தில் இவ்வளவு கேவலமாகவா நடந்து கொள்வது?
நடிகர் ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பயங்கரமாக திட்டி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதுடன், மும்மையில் அவருடன் சேர்ந்து வசித்து வருகின்றார்.
முதல் முறை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது மும்பையில் தனியாக சிக்கிவிட்டதாக கூறினார் ஸ்ருதி. ஆனால் இரண்டாவது லாக்டவுனின்போது துணைக்கு சாந்தனு இருப்பதால் நன்றாக இருக்கிறது என்றார். வீட்டில் இருக்கும் நேரத்தில் வகை, வகையாக சமைத்து சாந்தனுவை அசத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி.
அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டு வரும் ஸ்ருதி தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். தனது தோழி அம்ரிதா ராம் மற்றும் சாந்தனுவுடன் மும்பையில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்ருதி தன் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதை தோழி புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலைியல், ரசிகர்கள் பொதுஇடத்தில் இப்படியா முகம்சுழிக்கும் படி நடந்துகொள்வது என்று சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.