கோழிக்கறியை சமைப்பதற்கு முன் அலச கூடாதா?
பொதுவாக நம்மில் பலர் கோழிக்கறியை வாங்கி வந்து மஞ்சள் தூள், தயிர் என பல பொருட்களை போட்டு அலசிய பிறகு அதனை சமைக்கத் தொடங்குவார்கள்.
ஆனால், அது முறையான செயல் இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
அதாவது, கோழிக்கறியை சமைப்பதற்கு முன்பு, சமையலறையில் வைத்து கழுவக் கூடாது. ஏனெனில் இந்த கோழிக்கறியில் இருக்கும் பாக்டீரியாக்கள், அதனை அலசும் போது அதிலிருந்து தெறிக்கும் நீர் மூலம் ஒட்டுமொத்த சமையலறைக்கும் பரவும் அபாயம் இருக்கும்.
அதாவது, இந்த கோழிக்கறியை சமையலறையில் கழுவும்போது, அதன் சுற்றுப்புறம் முழுக்க பாக்டீரியாக்களால் நிரப்பப்படுகிறது. அதனால் அங்கு சமைக்கப்படும் உணவுகளில் அந்த பாக்டீரியாக்கள் கலந்து அதன் மூலம் நோய்கள் உருவாகும் என்று கூறப்படுகின்றது.
அதிலும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறால் கோழிக்கறியை அலசுவது, குழாயில் தண்ணீரை திறந்துவைத்துவிட்டு அலசுவது போன்றவை தவறாகும்.
இதனை சரியான முறையில் கழுவதே சிறந்தது. அதனை எப்படி என்று பார்ப்போம்.
எப்படி கழுவது சிறந்தது?
- பாத்திரம் தேய்க்கும் சிங்கில் எந்த பொருளும் இல்லாமல் எடுத்துவிடுங்கள்.
- கறியை ஒரு சில முறை தண்ணீரை பிடித்து ஊற்றி கழுவுங்கள்.
- அந்த நீரை சிந்தாமல் சிங்கிலேயே விழும்படி செய்யுங்கள்.
- கழுவிய பிறகு, கறியை கழுவும் போது தெளித்த தண்ணீர் திட்டுக்கள் எங்கெல்லாம் விழுந்திருக்கலாம் என்று கருதுகிறீர்களோ அதனை பேப்பர் டவல் எடுத்து துடைத்து குப்பையில் போட்டுவிடுங்கள்.
- அதன்பிறகு, உங்கள் கையை நன்கு சோப்பு போட்டு கழுவிய பிறகே பிற பாத்திரங்களைத் தொட வேண்டும்.