இந்த பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறியும் கொய்யாப்பழம் சாப்பிடாதீங்க
கொய்யாப்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. இந்த பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டாலே பல நன்மைகள் கிடைக்கும்.
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்திற்கு உதவுவது, மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இத்தனை பயன்கள் இருப்பினும் சில பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட கூடாது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது
| வயிற்று உப்புசம் | கொய்யாப்பழத்தில் இயற்கையான ரத்த சக்கரை இருக்கிறது. இதில் வைட்டமின் C ஊட்டச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆனால் சில நபர்களுக்கு வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லையை கொண்டு வரும். உடலானது அளவுக்கு அதிகமான வைட்டமின் C ஊட்டச்சத்தை உறுஞ்சும் சமயத்தில், குடலில் அவை புளிக்க வைக்கும் செயல்முறையின் போது வாயு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. இதனால் வயிறு வீக்கம், வயிறு நிரம்பிய உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். |
| நீரிழிவு நோய்ழிகள் | கொய்யாப்பழங்களில் குறைவான கிளைசிமிக் எண் இருப்பதன் காரணமாக இது ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகிறது. எனவே ரத்த சக்கரை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட கூடாது. எனவே ரத்த சக்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 சிறிய அளவு கொய்யாப்பழங்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. |
| இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் | கொய்யாப்பழத்தில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் கொய்யாப்பழம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது. ஆனால் IBS அல்லது பிற இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஒரு சில செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், அளவுக்கு அதிகமான வாயு மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும். IBS பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |