எனக்கு விஜயை விட இவரை தான் பிடிக்கும்! இலங்கை இளைஞர்கள் தமிழ் சினிமா பற்றி கொடுத்த ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் இலங்கை மக்கள் மத்தியில் எப்படி தாக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வீடியோக்காட்சியொன்று வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா என பார்க்கும் போது இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மொழி தெரியாதவர்கள் என்றாலும் தமிழ் நடிகர்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அந்தவகையில் இலங்கை - கொழும்பு நகரை மையமாக கொண்ட ஒரு ஆடை விற்பனை செய்யும் நிறுவனத்தில் சினிமா பற்றியும் அதிலுள்ள பிரபலங்கள் பற்றியும் ஒரு கருத்து கணிப்பு இடம்பெற்றுள்ளது.
அதில்,“ எனக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் எல்லா படங்களை பார்த்துள்ளேன். மேலும் அவரின் வாரிசு படம் எனக்கு பிடிக்கும்.” என ஓபனாக பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து “ சில ஹீரோக்களின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகியது என்றால் எங்களுக்கு கொஞ்சம் ஹீரோ சண்டைகள் வரும்.” என கூறியுள்ளார்.
இதன்படி, இலங்கை மக்களின் சினிமா பக்கம் எப்படி இருக்கின்றது என்பதனை கீழுள்ள வீடியோவில் தெரிந்து கொள்வோம்.