ஹீரோக்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பளார்: எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஒரு திரைப்படம் முழுமையடைய வேண்டுமென்றால் அதற்கு இசையும் வேண்டும். அந்தவகையில் தான் இசையமைப்பாளர்களின் வெற்றியைப் பொறுத்துதான் அவர்களின் சம்பளமும் தீர்மானிக்கப்படுகிறது.
அந்த வகையில், படத்தில் நடிக்கும் ஹீரோவைத் தாண்டி அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர்கள் யார் தெரியுமா?
இசையமைப்பாளர்களின் சம்பளம்
இசையமைப்பில் மட்டுமல்ல சம்பளத்திலும் உயரத்தில் இருப்பர் தான். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா திரைப்படத்தில் அறிமுகமாகி ஆஸ்கார் வரை சென்று சாதனைப்படைத்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவர் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடிக்கு சம்பளம் பெறுகிறார். இவர்தான் தமிழில் அதிகம் சம்பளம் பெறும் இசையமைப்பாளர் வரிசையில் முதலில் இருக்கிறார்.
இரண்டாவதாக அதிக சம்பளம் பெறுபவர்தான் வளர்ந்து கொண்டே வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். இவரின் பாடலுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் இசையால் வெளிவரும் பாடல்களையும் அசைப்போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இறுதியாக இவர் இசையமைத்த திரைப்படமான திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
மூன்றாவதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இவர் 100 படத்திற்கு மேல் இசையமைத்திருக்கிறார். இவரின் பாடல்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் படங்களாகும்.
மேலும், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் அண்மையில் புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் அந்தப்படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கியிருந்தார்.
இவர்கள் எல்லாவற்றிக்கும் மேலாக 16 கோடி ரூபா சம்பளம் பெற்றிருக்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா? தெலுங்கில் மகதீரா, பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் பிரமாண்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்தான் இசையமைப்பாளர் கீரவாணி.
இவர் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு 16 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்கள்.