நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு.... ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றமை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சல்மான் கான்
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக வளம் வருபவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் ஹீரோவாக திகழ்ந்து வரும் சல்மான் கான் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம் தான்.
தற்போது 58 வயதாகும் நிலையில் இவர் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால், இவருக்கும் பல நடிகைகளுக்கும் காதல் இருந்ததாக பல செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தது.
ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைஃப் போன்றவர்களுடன் காதல் தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் எதுவும் திருமணம் வரையில் செல்லவில்லை.
மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் சல்மான், தென்னிந்தியாவில் வெளியான பல ஹிட் படங்களை ரீமேக் செய்துள்ளார்.
தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கின்றார்.
இந்நிலையில் சல்மான் வீட்டின் அருகே இன்று அதிகாலையில் துப்பாக்கி சூடு நடந்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வரும் சல்மான் வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.இது குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |