விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா போட்டிருக்கும் பதிவு
விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18ஆம் திகதி காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.
அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட முதல் பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் இணைவது தொடர்பாக ஏதேனும் பதிவிட்டிருப்பார் என எண்ணியதாகவும் அவர்களது பிரிவு கவலை அளிப்பதாகவும் கமெண்ட் செய்து வபருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |