யாரும் பார்த்திராத சுறா மீனின் முட்டை...பல பார்வைகளைக் கடந்த வீடியோ!
மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையில் எப்பொழுதுமே ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் உயிரினங்களின் வித்தியாசமான வியக்க வைக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் நிறைந்த வண்ணமே உள்ளன.
உண்மையில் கூறப்போனால் மேற்பரப்புக்கு கீழே உள்ள உலகம் எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டுள்ளது.
இது கடல்வாழ் உயிரினங்களின் மீதான தாகத்தை நமக்கு அதிகப்படுத்துவதாக காணப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர், சுறா முட்டையொன்றை கையிலெடுத்து அதன் இனப்பெருக்கத்தை பற்றிய ஒரு நுண்ணறிவையும் வழங்குகின்றார்.
அதாவது, சுறாக்கள் இடும் முட்டையானது, ஒருவித கூம்பு வடிவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் முட்டையிடும்போது அந்த கூம்பானது, வளைந்து கொடுக்கும்.
ஆனால், காலம் செல்லச் செல்ல அது கடினமாக மாறுகிறது. இந்த குறித்த வீடியோவானது, பல்வேறு பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதனால் பார்வையாளர்களிடமிருந்து கணிசமான கருத்துக்கள் கிடைத்துள்ளன.