44 வயதிலும் நீச்சல் உடையில் என்ஜாய் செய்யும் சினேகா! யாருடன் தெரியுமா?
நடிகை சினேகா தனது குழந்தைகளுடன் நீச்சல் உடையில் என்ஜாய் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்ததில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சினேகா
தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள். நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.

அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.

தற்போது 44 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் சினேகா நீச்சல் உடையில் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |