கின்னஸ் சாதனைப் படைத்த எலி: எப்படி தெரியுமா?
இப்போது மனிதர்களைத் தாண்டி விலங்களும் சாதனைப் படைத்து வருகின்றது. அதிலும் ஒரு எலி சாதனைபடைத்திருக்கிறது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சாதனை படைத்த எலி
எலிகளின் ஆயுள் பொதுவாக அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.
இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது.
சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது.
பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.