திருமணம் முடிந்து 1 மாதத்திற்கு பின்னர் ஹனிமூன் சென்ற பிரபலம்! இணையத்தில் கசியும் புகைப்படங்கள்
திருமணம் முடிந்து சுமார் 1 மாதத்திற்கு பின்னர் ஹனிமூன் சென்ற ரோஜா சீரியல் நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இரகசிய திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் தான் பிரியங்கா நல்காரி.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் ஒரு கஷ்டமான குடும்பத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இவரின் குழந்தைத்தனமான சிரிப்புக்கும், ஹீரோயின் போல இருக்கும் இவரின் அழகிற்கும் பல கோடி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
மேலும் ரோஜா சீரியலில் தான் இவரை அடையாளப்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.
ஹனிமூன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்த பிரபலம்
இந்த நிலையில், மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் ராகுல் வர்மா என்கிற தொழிலதிபரை பிரியங்கா இரகசியமாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் இரகசிய திருமணம் என்று கூறியதுடன் நடிகை பிரியங்கா இதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.
இப்படியொரு நிலையில் தற்போது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.