முடிவுக்கு வரும் ரோஜா சீரியல்! உருக்கமாக பதிவு- என்ன சொல்லியிருக்கிறார்கள்?
பிரபல தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த 2018ம்ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா, இதில் சிபு சூர்யன், பிரியங்கா நல்காரி, வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அர்ஜீனாக வரும் சிபு சூர்யன் மற்றும் ரோஜாவாக வரும் பிரியங்கா நல்காரிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இவர்களது ஜோடி பொருத்தம் பிரமாதம் என கொண்டாடத் தொடங்கினார்கள் இல்லத்தரசிகள்.
எப்போதுமே டிஆர்பியில் முன்னணியில் இருந்த ரோஜா தொடர் சமீபகாலமாக பின்தங்கியிருந்ததாம்.
இதன் காரணமாகவும் ரோஜா சீரியலை முடிக்க திட்டமிட்டதாம் படக்குழு.
இந்நிலையில் நடிகர், நடிகைகள் சமூகவலைத்தளங்களில் மிக உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
பிரியங்கா நல்காரி
என் லைஃப்ல இந்த 4 + ஆண்டுகள் மறக்கமுடியாத பயணம். ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாம இங்க வந்த என்னை நீங்க எல்லாரும் உங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிட்டீங்க!
இந்த 4 + ஆண்டுகள்ல நிறைய நிறைய லவ் எனக்காக நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க.. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல... ஆனா, உங்க எல்லாருடைய அன்பும் கிடைச்சதுக்கு நான் ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவள்!
நிறைய நிறைய ஞாபகங்களோட நிறைய நல்ல உள்ளங்களோட அன்பு, ஆசிர்வாதத்தோட ரோஜா சீரியலில் இருந்து விடைபெறுகிறேன்.
இது முடிவல்ல! இன்னொரு தொடக்கம்! விரைவில் சந்திக்கிறேன்
என்றும் அன்புடன்
பிரியங்கா நல்காரி ரோஜா என பதிவிட்டுள்ளார்.
சிபு சூர்யன்
4 ஆண்டுகள் மிக அற்புதமான பயணம், நூற்றுக்கணக்கான நினைவுகள், அதிகளவான அன்புகள்.
மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அர்ஜீன் கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த சரிகம குழுவிற்கும், சன் தொலைக்காட்சிக்கும் நன்றிகள் பல.
அளவுகடந்த அன்பை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி, இந்த அன்பு என்றென்றும் தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.