யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்த ரோஜா சீரியல் நாயகி! மாப்பிள்ளையை பார்த்துருக்கீங்களா?
மலேசியாவில் யாருக்கும் தெரியாமல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரோஜா சீரியல் நாயகியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் செய்த சாதனைகள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் தான் பிரியங்கா நல்காரி.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் ஒரு கஷ்டமான குடும்பத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இவரின் குழந்தைத்தனமான சிரிப்புக்கும், ஹீரோயின் போல இருக்கும் இவரின் அழகிற்கும் பல கோடி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும் ரோஜா சீரியலில் தான் இவரை அடையாளப்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.
இரகசிய திருமணம்
இந்த நிலையில், மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் ராகுல் வர்மா என்கிற தொழிலதிபரை பிரியங்கா இரகசியமாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவரின் திருமணம் குறித்து எந்த விதமான தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதனை தெரிந்து கொண்ட சக பிரபலங்கள் குறித்து தம்பதியினருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.