தங்கையின் திருமணத்தில் ஜொலித்த ரோஜா! பிரியங்கா வீட்டில் விசேஷம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரியங்கா நல்காரியின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.
தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்திருந்தார், ரோஜா சீரியல் மூலம் தமிழில் என்ட்ரியான பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
பொறுமைசாலியாக, தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் பிரியங்காவை, ரோஜாவுக்கு பொருத்தமானவர் இவர் தான் என கூறுமளவுக்கு பட்டையை கிளப்பி வருகிறார்.
கிட்டத்தட்ட இல்லத்தரசிகளின் செல்லப்பிள்ளையாக வலம்வரும் பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகிறது.
அவரது தங்கை திருமணத்தில் சேலை அணிந்து மணப்பெண்ணாக ஜொலித்துள்ளார் பிரியங்கா.