Exclusive Interview: தனுஷ் கூட அட்ஜெஸ்மெண்ட்-க்கு கேட்டாங்க... நடிகை பகீர் தகவல்
சினிமா வாய்ப்பு தருவதாகவும், அப்படியென்றால் நடிகர் தனுஷ் உடன் அட்ஜெஸ்மெண்ட் இருக்கும் என தனுஷ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பேசிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வானத்தைப் போல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மான்யா ஆனந்த்.
இவர், நடிப்பில் ஒளிபரப்பாகிய வானத்தை போல சீரியல், பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக ஓடியது. அதன் பின்னர், அன்னம், மருமகள் போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
மான்யா ஆனந்த் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் இணையவாசிகள் மத்தியில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனுஷ் உடன் கமிட்மெண்டா?
இந்த நிலையில், பேட்டியில் நடிகர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய விடயங்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு நடிகர்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக பேசப்பட்டது.
அப்போது, “நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் பேசுகிறேன். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கிறது. நீங்கள் செய்றீங்களா? என கேட்டார். அதற்கு சரி எனக் கூற, உங்களுடைய டிமாண்ட் என்ன என கேட்டார். அதற்கு, “ ரொம்ப ஓவர் கிளாமரா இருந்தாலும் நடிக்க மாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் பண்ண மாட்டேன். எனக்கு டீசண்ட் ஆன கேரக்டர் இருந்தால் நடிப்பேன் என்றேன்.

தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ண மாட்டீங்களா? என கேட்டார். நான் யாராக இருந்தாலும் நடிக்கமாட்டேன் எனக் கூறிய பின்னர், கமிட்மெண்ட் இருக்கும் என்றார். இது குறித்து கேட்க, திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் கதாநாயகருடன் சில கமிட்மெண்ட் இருக்கும் என்றார். நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிவிட்டேன்..” என ஓபனாக பேசியிருக்கிறார்.
தனுஷ் மேனேஜர் என பேசியது யார் என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று பல நடிகர்களுக்கு நடக்கிறது இதற்கான தகுந்த ஆக்ஷ்ன் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த பேட்டியை பார்த்த பலரும், மான்யாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |