Ethirneechal: தர்ஷன் பார்கவி நிரந்தர பிரிவு... உக்கிர தாண்டவம் ஆடும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் பார்கவி இடையே போலிசார் கடிதம் ஒன்றினை எழுதிவாங்கிவிட்டு சென்றுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாகி ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
சக்தியை அடித்து சித்ரவதை செய்த காட்சியினை ஜனனியிடம் காட்டி, ஜனனியினை தனது காலில் விழ வைத்துள்ளார். மேலும் ஜனனி நந்தினி, ரேணுகாவிடமும் சத்தியம் வாங்கி சென்றுள்ளார்.

நந்தினி குற்றாலம் சென்று சக்தியை வீதி வீதியாக தேடிவரும் நிலையில், வீட்டில் குணசேகரனின் ஆட்டம் எல்லைமீறி சென்றுள்ளது.
தர்ஷன் பார்கவி திருமணம் நடைபெறவில்லை என்றும், அன்புக்கரசியை தான் தர்ஷன் திருமணம் செய்ததாகவும் திருமணத்தை பதிவு செய்து வைத்துள்ளார்.
மற்றொரு புறம் அன்புக்கரசியும் தர்ஷனை விடாமல் பிடித்து வைத்துக்கொள்ள, தர்ஷன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். மேலும் குணசேகரன் போலிசாரை வீட்டிற்கு வரவழைத்து தர்ஷன், பார்கவி இடையே எங்களது இருவருக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கியுள்ளனர்.
தர்ஷனின் பிடிவாதம் அதிகரிக்கவே குணசேகரன் தர்ஷனை அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். சக்தியை ஜனனி கண்டுபிடித்துவாரா? ராணா ஜனனிக்கு உதவி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |