குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகம்: மார்ச்சில் இருந்து இந்த ராசிக்கு வெற்றி தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில், அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுதும் கிரகங்களின் அரசனாக அறியப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக அறியப்படும் குரு பகவானும் மார்ச் மாதத்தில் இணைவதால், அதி சக்தி வாய்ந்த நவபஞ்ச யோகம் உருவாகவுள்ளது.

குறித்த யோகமானது, 12 ராசிகளிலும் சில சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

குரு சூரியனால் உருவாகவுள்ள நவபஞ்ச யோகத்தால் மேஷ ராசியினர் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
குறிப்பாக பொருளாதார ரீதியில் பெருமளவான முன்னேற்றம் இருக்கும். சூரியனின் ஆசியால், தலைமை பொறுப்புக்கள் மற்றும் உயர் பதிவிகள் தேடி வரும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சூரியன், குரு இரண்டு கிரகங்களுமே தங்கத்துடன் தொடர்பு படுவதால், பொன் சேரும், நிலம் மற்றும் புதிய வீடு வாங்கும் யோகம் கூடி வரும்.
சிம்மம்

குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் சிம்ம ராசியினரின் வாழ்வில் இதுவரை அல்லாத அளவுக்கு தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். இவர்கள் இருக்கும் இடத்தை தேடி பணம் வர ஆரம்பிக்கும்.
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானத்தை பெருக்கக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் பணத்தால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்துடன் மகிழ்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் அதற்கான யோகம் கூடிவரும். சூரியன் குரு ஆசியால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்

குரு சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் விருச்சிக ராசியினருக்கு புதிய வழிகளில் வருமான ஆதாரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
பழைய முதலீடுகளினால் இப்போது எதிர்ப்பார்க வகையில், லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்கள் தொழிலில் கூடுதல் அக்களை காட்டினால், வெற்றியின் உச்சத்தை தொடுவது உறுதி.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |