கோலிவுட்டின் கோடீஸ்வரி இவங்க தானாம்.. சொத்து மதிப்பு கேட்டால் வாயடைத்து போவீங்க
நடிகை நயன்தாரா இன்றைய தினம் தன்னுடைய 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.
இவர், நடிப்பில் கடைசியாக Test திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
மாதவன், சித்தார்த் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் கிரிக்கட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. நயன்தாரா எவ்வளவு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவ்வளவு சம்பளமும் அதிகமாக உள்ளது.

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகையாகவும் பார்க்கப்படுகிறார். சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்.
சொத்துக்கள் இவ்வளவு இருக்கா?
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா இன்றைய தினம் அவருடைய பிறந்த நாளை குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா ஜவான் திரைப்படம் மூலம் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். திரைப்படங்கள் நடிப்பதுடன் இருக்காமல் துபாயில் சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

பங்களா, சொகுசு கார்கள் என சொகுசு வாழ்க்கை வாழும் நயன்தாராவிற்கு தனி விமானம் உள்ளதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கணவரை விட இவரிடம் 250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |