பட்டதாரியான சிறகடிக்க ஆசை சீரியல் மீனா- புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்
பட்டதாரிகள் அணியும் ஆடையுடன் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா வெளியிட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.
சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பட்டதாரியான கோமதி பிரியா
மதுரையை சார்ந்த கோமதி பிரியாவிற்கு இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் பாவம் கணேசன் உட்பட சில சீரியல்களில் கோமதி பிரியா நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் தேடி தந்துள்ளது.
தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியலில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரோ அதே போன்று சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், பட்டதாரிகள் அணியும் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், சீரியலில் அடுத்த காட்சிகள் இதுவாக இருக்கலாம் எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |