ரீல் கணவர் - ரியல் கணவர் என மேடையில் குஷியாகிய ஆல்யா! சம்பவம் செய்த சஞ்சிவ்
ரீல் கணவர் - ரியல் கணவர் என மேடையில் குஷியாகிய ஆல்யா மானசாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனாலும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகவில்லை.
அதிலும் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் “ இனியா” சீரியலில் நடித்து வரும் ஆல்யா என்ன தான் ஷீட்டிங் இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
மேடையில் நடந்த அந்தவொரு சம்பவம்
தினமும் ஒரு புகைப்படம் மற்றும் ரீல்ஸ் என ரசிகர்கள் மனதில் தினமும் இடம்பிடித்த வண்ணம் உள்ளார்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆல்யாவை விருது வழங்க அழைத்த போது சஞ்சிவ் அவரை செங்குத்தாக தூக்கி சென்றுள்ளார்.
இந்த காட்சியை பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோசமாக உள்ளது. இதையும் தாண்டி அவரின் ரீல் கணவரும் அந்த மேடைக்கு வந்து ஆல்யாவை கட்டியணைத்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ரீல் கணவர், ரியல் கணவர் என ஆல்யாவிற்கு ஒரே குஷி தான்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |