இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஹனிமூன் சென்ற சினேகா- பிரசன்னா
திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவருடன் இரண்டாவது சென்ற சினேகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினிமா
“மானசி” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தவர் தான் நடிகை சினேகா.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் “என்னவளே” என்ற திரைப்படத்தை நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இவரின் நடிப்பை பார்த்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.
தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் - சினேகா கூட்டணியில் வசீகரா என்ற படம் வெளியானது. இது சினேகாவின் மார்க்கட்டை உயர்த்தியது என்றே கூற வேண்டும்.
இரண்டாவது ஹனிமூன் சென்ற பிரபலங்கள்
சினிமாவில் இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்கள் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனாலும் இவர்கள் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது இருவரும் இரண்டாவது ஹனிமூன் சென்றுள்ளார்கள். இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.