70 வயதில் நடிகர் செந்திலுக்கு நடந்த திருமணம் - வைரலாகும் வீடியோ...!
70 வயதில் செந்திலுக்கு நடந்த திருமணம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவில், நகைச்சுவையில் அசத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி-செந்தில். இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி பட்டைய கிளப்பியது. அந்த வகையில், கவுண்டமணியுடன் இணைந்தும், தனியாகவும், மற்ற சிலருடன் இணைந்தும் காமெடிகளில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தனர்.
இவர் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். நடிகர் செந்தில், கவுண்டமணியும் சேர்ந்து, அப்பாவியாகவும், குசும்புத்தனத்துடனும் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் இன்று வரை கவர்ந்துள்ளது. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் செந்தில்.
செந்தில் குடும்பம்
1984ம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நடிகர் செந்தில். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவராக உள்ளார். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு, ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
70 வயதில் செந்திலுக்கு நடந்த திருமணம்
சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் செந்தில். இதனையடுத்து, திருக்கடையூர் அபிராமி கோயிலில் தனது குடும்பத்துடன் நடிகர் செந்தில் வழிபாடு நடத்தியுள்ளார்.
திருக்கடையூரில் அபிராமி அம்பிகா சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில், நடிகர் செந்திலும், பீமரத சாந்தியும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
70 வயதில் செந்திலுக்கு நடந்த திருமணம் ! | Actor Senthil Marriage#ComedyActor | #Senthil | #WeddingAnniversary pic.twitter.com/LZ43avSTw7
— VOT 24x7 (@VOT24x7) March 30, 2023
அங்கேயும் இங்கேயும் சென்று இந்து மதம் 👍👍
— K.Ashok adv (@ashok777_kalam) March 29, 2023
நகைச்சுவை நடிகர் செந்தில் தம்பதி பீமரத சாந்தி பூஜை.. 70 வயது கடந்ததையொட்டி குடும்பத்தினருடன் வழிபாடு..!
அபிராமி அம்பிகா சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர்#ActorSenthil | pic.twitter.com/G9XSyUwDQH