தினமும் இத்தனை படிக்கட்டுகள் ஏறுனா போதும்... மாரடைப்பே வராதாம் தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அதற்காக முயற்சியை மேற்கொள்ளும் போது எதிர்மறையாக செயற்படுகின்றோம் என்பதே உண்மை.
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் போதிய உடற்பயிற்சி என்பன இன்றியமையாதது.
இவ்வளவு நன்மைகளா?
ஆய்வுகளின் அடிப்படையில் சாதாரணமாக ஒவ்வொரு நாளும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதன் மூலம் அதிக உடல் செயல்பாடுகளைச் செய்பவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
படிக்கட்டுகளில் ஏறும் பழக்கத்தை கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு நோய் தாக்கம் குறைவது மட்டுமன்றி, மரணம் ஏற்படும் அபாயம் நான்கில் ஒரு பங்கு குறைவடைகின்றது.
4,50,000 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மூலம் தினமும் படிக்கட்டுகளில் ஏறுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 39 சதவீதம் குறைவது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 50 படிகள் கொண்ட படிக்கட்டுகளில் ஏறுவது இருதய நோய் அபாயத்தை 20 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கிறது.
மேலும் படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் வலுவாக குறைகின்றது.
மேலும் குறித்த ஆய்வின் ஆராய்ச்சியாளரான கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் டாக்டர் சோஃபி பேடாக் தெரிவிக்கையில், “இந்த ஆய்வின் அடிப்படையில், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் படிக்கட்டுகளை தவறாமல் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.” என வலியுறுத்தியுள்ளார்.
தினசரி வாழ்வில் படிக்கட்டுகளை எந்தளவுக்கு பயன்படுத்துகின்றோமோ அந்தளவுக்கு ஆரோக்கியமாகவும் இளமையாகவும் நீண்ட நாட்கள் வாழ முடியும்.
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு இடங்களிலோ பொரும்பாலானவர்கள் படிக்கட்டுகளைத் தவிர்க்கிறார்கள். ஆனால் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் சீரான செயற்பாட்டுக்கும் இன்றியமையாதது.
அதிகமாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தாவிட்டாலும், ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
சிறந்த அம்சம் என்னவென்றால், படிக்கட்டுகளில் ஏற அதிக நேரம் எடுக்காது. ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது 100 வருடம் ஆரோக்கியமாக வாழ துணைப்புரிவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
முக்கியமாக படிகளில் ஏறும் போது வேகமாக ஏறுவதன் மூலமே இந்த பலன் கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |