இந்த ராசியினர் தவறியும் செம்பு ஆபரணம் அணிய கூடாது... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் அணியும் ஆபரணங்கள் நமது எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு உலோகத்திலான ஆபரணங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கும் அதே நேரம் சில வகையான ஆபரணங்கள் துரதிஷ்டத்தை கொண்டு வரும்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு உலோகத்தை அணியும் முன்னர் அதன் பண்புகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
உலோகங்கள் பற்றிய தகவல்கள் ஜோதிடத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சனாதன தர்மத்தில் செம்பு ஒரு மங்களகரமான அதிர்ஷ்டம் நிறைந்த உலோகமாக பார்க்கப்படுகின்றது.
எந்த ராயின் அதனை ஆபரணமாக அணிவது சாதக பலன்களை கொடுக்கும் என்பது தொடர்பிலும் எந்த ராசியினர் அணிவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அணிய கூடாது?
மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் இருப்பதால் செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த அனுமனை வழிபடுவது வழக்கம்.
இந்த ராசிக்காரர்கள் செம்பு ஆபரணங்களை அணிவது அதிஷ்டத்தை கொடுக்கும். சிம்ம ராசிக்காரர்கள் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிவது மிகவும் மங்களகரமானது.
இந்த ராசிக்காரர்கள் செப்பு அணிகலன்களை அணிவதால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தனுசு ராசியின் அதிபதியாக வியாழன் இருப்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களின் இயல்பு பொறுப்பற்றதாகவும் விளையாட்டு தனமானதாகவும் இருக்கும்.
இதனால் அவர்கள் செம்பு அணிகலன்களை அணிவது பொறுப்புணர்ச்சியை தூண்டும்.மேலும் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். மேற்குறித்த மூன்று ராசிக்கார்கள் தவிர ஏனைய ராசிக்காரர்கள் செம்பு ஆபரணங்களை ஒருபோதும் அணியவே கூடாது.
செம்பு அணிவது ஏனைய அனைத்து ராசிக்காரர்களுக்கும் தீமையை கொடுக்கும் என அர்தம் கிடையாது ஆனால் ஏனைய ராசியினர் செம்பு ஆபரணங்களை அணிவதில் எந்த பலனும் இருக்காது.
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் நகையாக செம்பு அணியக் கூடாது. இது அவர்களது வாழ்க்கையில் துரதிஷ்டத்தை கொண்டுவரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |