தேள் கடித்து விட்டதா? விஷம் ஏறாமல் இருக்க இதை செய்தால் போதும்!
பொதுவாக வீடுகளில் தேள் கடித்தவுடன் பதறுவார்கள்.
இந்த விலங்குகள் வேட்டையாடுவதற்கு மற்றும் பாதுகாப்பிற்காக மட்டுமே கடிக்கிறது.
ஆனால் இது போன்ற பூச்சிகள் கடித்தவுடன் அதற்கு உரிய மருத்துவம் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து மற்றைய பூச்சிகளை விட தேள் கடித்தால் அது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தேள் கடித்தால் உடனடியாக என்ன செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
தேள் கடித்தால் ஆபத்து
1. தேள் கடித்து விட்டது என தெரிந்தவுடன் அந்த இடத்தில் ஜஸ் கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்க வேண்டும்.
2. வெங்காயத்தை இரண்டாக வெட்டி தேள் கடித்தவர்களுக்கு அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்தால் அதன் வீக்கம் குறையும்.
3. எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் இரண்டையும் சேர்த்து தண்ணீர் கலந்து குடித்தால் தேள் கடித்த விஷம் குறையும்.
4. நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் அடுத்த நொடி மாறி விடும்.
5. புளியங்கொட்டையை எடுத்து கல்லில் தேய்த்து கொஞ்சம் அதனை தேள் கடித்த
இடத்தில் தேய்த்தால் விஷம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.