முகத்தில் சுருக்கங்களை தடுக்கும் ஐஸ்கட்டி மசாஜ்! இது தெரியாமல் போச்சே
முக அழகை மேம்படுத்துவதற்கு மசாஜ் மிகவும் முக்கியம். நாம் பழங்கள், எண்ணெய், மூலிகை, பொடி வகைகள் என பலவிதமான பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்வோம்.
ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்தால் எப்படி இருக்கும்? ஐஸ் கட்டி மசாஜினால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன எனப் பார்ப்போம்..
சருமத்தை தூண்டும்
சருமம் புதுப்பொலிவுடனும் மென்மையாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். சருமத்தை சுத்தம் செய்து சிறு சிறு துளைகளை சுத்தமாக்கும்.
வீக்கத்தை குறைக்கும்
முகத்தில் வீக்கம், வடுக்கள் இருந்தால் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் அது குறைவடையும்.
சுருக்கங்களைத் தடுக்கும்
ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
சருமம் பொலிவாகும்
ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் சீராக நடக்கும். அதனால் சருமம் பொலிவாகும்.
கருவளையங்கள் குறையும்
ரோஸ் வோட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து அந்தக் கலவையை கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால் கருவளையம் நீங்கும்.