தேளின் விஷம் 80 கோடியா? எதற்காக பயன்படுகின்றது?
தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா இடங்களிலும் பயங்கரமான உயிரினமாக பார்க்கப்படும் தேள் பணம் கொட்டும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.
ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய். துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தான் இந்த பணி நடைபெற்று வருகிறது. ஒரு நாளுக்கு 2 கிராம் மட்டுமே நஞ்சு எடுக்கப்படுகிறது.
தேள் விஷம் எவ்வாறு எடுக்கப்படுகின்றது?
தினமும் தேளை பெட்டியிலிருந்து எடுத்து அது ஒரு துளி நஞ்சை வெளியிடும் வரை காத்திருந்து அதனை ஆய்வாளர்கள் சேகரிக்கின்றனர்.
ஒரு தேளை இடுக்கி போன்ற கருவியால் பிடித்துக்கொண்டு மற்றொரு கருவியால் அதன் கொடுக்கை அழுத்தி நஞ்சு சேகரிக்கப்படுகிறது. பின்னர் அதனை உறைய வைத்து, அரைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.
தேள் விஷத்தின் பயன்கள்
நோய் எதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள்
வலி நிவாரணிகள் போன்றவற்றை உருவாக்க தேள் நஞ்சு பயன்படுகிறது. மூளைக்கட்டி (Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது.
ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு இருக்கிறது. 300, 400 தேள்களில் இருந்து ஒரு கிராம் நஞ்சு கிடைப்பதாக கூறப்படுகின்றது.