அரிசி விட சிறிய மூளை சிப் கண்டுபிடிப்பு- மருத்துவ துறையில் புதிய புரட்சி
அரிசி மணியை விடச் சிறிய வயர்லெஸ் மூளை சிப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்கள் அதற்கு பழக வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன்படி, நரம்பியல் தொழில்நுட்பம் (neurotechnology) பிரமித்து போகும் அளவுக்கு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது, அரிசி மணியை விடச் சிறிய ஒரு அதிநவீன மூளை உட்பொருத்தும் கருவி (Brain Implant) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'MOTE' மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு என அழைக்கப்படும் இந்த புதிய சாதனத்தை வைத்து உடலின் மற்ற நுட்பமான பாகங்களின் செயல்பாடுகளை கண்டறிய முடியும்.
இது போன்று MOTE சாதனத்தை வைத்து என்னென்ன விடயங்களை தெரிந்து கொள்ளலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

MOTE கண்டுபிடிப்பு
மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு சாதனம் வயர்லெஸ் முறையில் கடத்தக்கூடிய உலகின் மிகச்சிறிய நரம்பியல் இம்ப்லாண்ட் ஆகும். இதன் அளவு சுமாராக 300 மைக்ரான் நீளம், 70 மைக்ரான் அகலம் இருக்கும் என்றும் ஒரு மனித முடியின் அகலத்தில் தான் இருக்கும் என்றும் உதாரணம் காட்டியுள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மைக்ரோ-சாதனம், மூளையில் உருவாகும் நரம்பியல் சமிக்ஞைகளை (Neural Signals) அகச்சிவப்பு ஒளித் துடிப்புகளாக (Infrared Light) மாற்றி, மனித மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் மண்டையோடு வழியாக ஊடுருவி வெளியே உள்ள ரிசீவருக்குத் தகவலை அனுப்பும் வேலையை செய்கிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு குறித்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 20 ஆண்டுகால உழைப்பின் வழியாக நிஜமாகியுள்ளது. அலுமினியம் காலியம் ஆர்சனைடு என்ற சிறப்பு செமிகண்டக்டரால் உருவாக்கப்பட்ட மைக்ரோஸ்கேல் ஆப்டோஎலக்ட்ரானிக் டெதர்லெஸ் எலக்ட்ரோடு சாதனம் முக்கியமான இரண்டு வேலைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
- தகவலை அனுப்ப அகச்சிவப்பு ஒளியை வெளியிடும். இதற்கு தேவையான சக்தியை ஒளியில் இருந்து பெற்றுக் கொள்கிறது. இதன் மூலம் இவ்வளவு நாட்களாக மூளை உள்வைப்புகளில் உள்ள பல சிக்கல்களை MOTE தீர்த்து வைப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
- பழைய இம்ப்லாண்ட்கள் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் MRI ஸ்கேன் அறைகளுக்குள் செல்வதற்கான தகுதியை இழந்துள்ளது. மாறாக MOTE, MRI ஸ்கேன்களுடன் எந்தப் பிரச்னையும் செய்யாத பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் முடிவு
வழக்கமான எலக்ட்ரோடுகள் மூளையில் எரிச்சலையும், திசுக்களின் எதிர்ப்பை (Immune Response) தூண்டும் என்பதால் MOTE-ன் வயர்லெஸ் வடிவமைப்பு, அதன் அளவு இரண்டும் மூளைக்கு எந்தவித பிரச்சினையையும் தராமல் செயற்படுகிறது.
இதனை எலிகளின் மூளையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இது வீச்சு மூளையுடன் மட்டுமல்லாமல் தண்டுவடம் (Spinal Cord) போன்ற உடலின் அதி நுட்பமான பகுதிகளில் இருந்தும் சிக்னல்களைப் பதிவு செய்யும்.

இனி வரும் நாட்களில் செயற்கை மண்டை ஓட்டுத் தகடுகளில் கூட (Synthetic Skull Plates) இதை எளிதாகப் பொருத்த முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |