500 ஆண்டுகளின் பின் உருவாகும் குரு உதயம் - ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு?
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிகளுக்குமான பலனை தரும். அந்த வகையில் வரும் ஜூலை மாதத்தில் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
அதே வேளையில் குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். இவ்விரு கிரகங்களின் பயணமும் ஒவ்வொரு ராசிகளின் வாழ்க்கையிலும் பல நற்பலனை கொண்டுவரப்போகிறது. யார் அந்த அதிஷ்ட ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் | இவ்விரு கிரகங்களின் மாற்றங்கள் உங்களுக்கு அற்புத பலன்களை கொடுக்கும். குரு மற்றும் சனியால் உங்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் செய்தால் அதில் பத்த லாபத்தை பெறுவீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். |
ரிஷபம் | சனி குருவின் மாற்றம் உங்களுக்கு அதிஷ்டத்தை தரும். சனியின் வக்ரம் குருவின் உதயம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு தரும். முதலீடு செய்ய சிறப்பான காலமாக இருக்கும். எந்த வேலையிலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பயணங்கள் நல்ல பலனைத் தரும். படிப்பு மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும். கடன் கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். |
தனுசு | சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். குரு மற்றும் சனியால் நீங்கள் பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். புதிய வணிகம் தொடங்கும் வாய்ப்புக்கள் அதிகம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).